தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டி கிளர்க் உயிரிழந்ததை அடுத்து நான்கு நாட்களை துக்கத்தினத்தை அந்நாட்டு அரசாங்கம் அறிவித்தது.
அதன்படி கடந்த புதன்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடவும் அந்நாட்டு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட டி கிளர்க் கடந்த வாரம் வியாழக்கிழமை தனது 85வது வயதில் காலமாகியிருந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சடங்கு இடம்பெற்றிருந்தது.