கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
பொரளை சீமாட்டி ரிஜ்வே சிறுவர் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஜீ. விஜேசூரிய இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையைக் கட்டுப்படுத்த பெரியவர்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.