பெலரஸில் இருந்து நாட்டிற்குள் நுழைய முயன்ற குடியேற்றவாசிகளுக்கு எதிராக போலந்துப் படைகள் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் தாரைப் பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர்.
எல்லைக் கடவைக் காக்கும் போலந்துப் படைகள் மீது குடியேற்றவாசிர் கற்கள் மற்றும் பிற பொருட்களை கொண்டு வீசுவதை வீடியோ காட்சிகள் காட்டுகின்றன.
பல வாரங்களாக, மத்திய கிழக்கில் இருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர், ஐரோப்பிய ஒன்றியத்தை அடையும் முயற்சியில் பெலரஸ் எல்லையில் கூடி வருகின்றனர்.
மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தை சீர்குலைக்க புலம்பெயர் மக்களை எல்லைக்கு தள்ளியதாக பெலரஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது, இருப்பினும் இந்த குற்றச்சாட்டை அந்த அரசாங்கம் மறுத்துள்ளது.
நீண்ட காலமாக அலெக்சாண்டர் லுகாஷென்கோ கடந்த ஆண்டு ஜெனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவித்ததில் இருந்து ஐரோப்பிய ஒன்றிய-பெலரஸ் உறவுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
அத்தோடு வாக்கெடுப்பை அடுத்து ஐரோப்பிய ஒன்றியம் பெலரஸ் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது.
இந்த மாதம் இதுவரை பெலரஸிலிருந்து போலந்திற்குள் குடியேற 5,000 க்கும் மேற்பட்டவர்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.