மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்ட திறன் அபிவிருத்தி வகுப்பறை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றைய தினம் (புதன் கிழமை) மதியம் 12 மணியளவில் சித்திவிநாயகர் இந்து கல்லூரியின் அதிபர் வி.பாலபவன் தலைமையில் இடம் பெற்றது.
சித்திவிநாயகர் தேசிய பாடசாலையின் கோரிக்கைக்கு அமைவாக கொமொர்ஷல் வங்கியின் நூற்றாண்டு நிறைவினை முன்னிட்டு 100 வகுப்பறைகள் வழங்கும் தேசிய திட்டத்தின் கீழ் குறித்த திறன் வகுப்பறைகள் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டது.
மாணவர்களின் கல்வி தேர்சியை அதிகரிக்கும் முகமாகவும் நவீன தொழில் நுற்ப முறைகள் மூலம் கற்கைகளை மேற்கொண்டு நாடத்தவும் அமைக்கப்பட்ட திறன் அபிவிருத்தி வகுப்பறைகள் வைபவ ரீதியாக மேற்படி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் வலய கல்வி பணிப்பாளர் செல்வி. தேவ தயாளினி , சிறப்பு விருந்தினர்களாக கொமர்ஷல் வங்கியின் பிராந்திய முகாமையாளர் R. சிவஞானம், மன்னார் கொமர்ஷல் வங்கி கிளையின் முகாமையாளர் N.டொமினிக் அலன்,மன்னார் நகரசபை உறுப்பினர் பிருந்தாவன நாதன் ,சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் உப அதிபர், பழைய மாணவர்கள் உற்பட பலர் கலந்து கொண்டு வைபவரீதியாக திறன் வைபவ ரீதியாக திறன் அபிவிருத்தி வகுப்பறையை ஆரம்பித்து வைத்தனர்.