உகண்டாவின் தலைநகரில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளதாக கென்யா அரசாங்கம் கூறியுள்ளது.
எனவே மக்களின் விழிப்புடன் இருக்குமாறும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்து முறைப்பாடு வழங்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
தலைநகர் நைரோபிக்கு வெளியே உள்ள அதிகபட்ச பாதுகாப்பு உள்ள சிறைச்சாலையில் இருந்து பயங்கரவாத குற்றச்சாட்டுகளுக்காக தண்டிக்கப்பட்ட மூன்று கைதிகள் தப்பி ஓடியுள்ளனர்.
இந்நிலையில் உகண்டாவில், மூன்று தற்கொலை குண்டுதாரிகள் கம்பாலாவில் இரண்டு இடங்களில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து பாரிய சேதத்தினை ஏற்படுத்தியுள்ளனர்.
குறித்த பயங்கரவாத தாக்குதலுக்கு ஐ.எஸ்.அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில் அண்டை நாடான கென்யா அரசாங்கம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.