புர்கினா பாசோவின் தலைநகர் ஒவாகடூகோவில் ஜனாதிபதி ரோச் கபோரை பதவி விலகக் கோரி நூற்றுக்கணக்கானவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த வார இறுதியில் 28 இராணுவத்தினர் மற்றும் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில், போராளிகளை கட்டுப்படுத்த ஜனாதிபதி தவறிவிட்டார் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
சமீபத்திய தாக்குதல்கள் தொடர்பாக நேற்று செவ்வாய்கிழமை மூன்று நாட்கள் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந்த மாத தொடக்கத்தில் மாலியின் வடக்கு எல்லைக்கு அருகில் உள்ள சந்தையில் துப்பாக்கி ஏந்தியவர்கள் நடத்திய தாக்குதலில் பலர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.