கொழும்பில் அரசியல் கட்சியினால் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக ஏற்படக்கூடிய கொரோனா நோயாளர்களின் அதிகரிப்பை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் குறித்து சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத், போராட்டம் காரணமாக ஏற்படக்கூடிய வழக்குகளின் அதிகரிப்பு 10 முதல் 15 நாட்களுக்குப் பின்னரே தெரியும் என்று கூறினார்.
பாதிப்பு ஏற்படும் வரை சுகாதார அதிகாரிகளாகிய தாங்கள் காத்திருக்கவில்லை என்றும் பாதிப்பு மோசமடைவதற்கு முன்பு அதைத் தடுக்க அனைத்து தீர்வு அல்லது நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக ஹேரத் குறிப்பிட்டார்.
மேலும் தொற்றுநோயின் அடிப்படையில் நாடு ஒரு முக்கியமான கட்டத்தில் இருக்கும்போது இதுபோன்ற போராட்டங்களைத் தொடங்க அரசியல் கட்சிகள் அல்லது வேறு எந்த அமைப்புகளின் இத்தகைய நகர்வுகளுக்கு தாங்கள் ஒப்புதல் அளிக்கவோ அல்லது மன்னிக்கவோ மாட்டோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.