பிரிட்டிஷ் கொலம்பியாவின் சில பகுதிகளை அழித்த பாரிய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை உயரும் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், பசிபிக் கடற்கரை மாகாணத்தில் சுமார் 18,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சர் மார்கோ மென்டிசினோ தெரிவித்துள்ளார்.
பெருமழை மற்றும் மண்சரிவுகளால் அங்கு தற்போது வரை மூன்று பேரைக் காணவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘வரவிருக்கும் நாட்களில் இன்னும் கூடுதலான உயிரிழப்புகளை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்.
நாங்கள் பயணக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவோம், அத்தியாவசியப் பொருட்களின் போக்குவரத்து மற்றும் மருத்துவ மற்றும் அவசர சேவைகள் தேவைப்படும் சமூகங்களைச் சென்றடைய முடியும் என்பதை உறுதி செய்வோம்’ என கூறினார், மேலும், பொருட்களை பதுக்கி வைக்க வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தினார்.
நேற்று (புதன்கிழமை) அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்திய மத்திய அரசாங்கம் அங்கு உதவிப் பொருட்களை அனுப்பி வருகின்றனர்.