பல்வேறு அமைச்சுகளுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் சட்ட ரீதியான கட்டமைப்பில் திருத்தம் செய்யப்பட்டுள்ளமைக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்றிலிருந்து (புதன்கிழமை) அமுலுக்கு வரும் வகையில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஜனாதிபதி காரியாலயம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வேலைத்திட்டங்கள் ஆகியவற்றின் கீழுள்ள நிறுவனங்னள் மற்றும் சட்ட கட்டமைப்பு என்பவற்றில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக அரச பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பு, நிதி அமைச்சின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பு என்பவை திருத்தம் செய்யப்பட்டுள்ளன.
வெளிநாட்டு அமைச்சு, திறன் மேம்பாடு தொழில் கல்வி ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க இராஜாங்க அமைச்சின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பு, வெகுஜன ஊடக அமைச்சின் நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பு நேற்றிலிருந்து அமுலாகும் வரையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளன.