ஜம்மு காஷ்மீரிலுள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பொலிஸ் கண்காணிப்பாளர்கள் ஆகியோருடன் ஆளுநர் லெப்டினன்ட் மனோஜ் சின்ஹா சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, ஜம்மு-கஷ்மீர் யூனியன் பிரதேசம் முழுவதும் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்புச் செயற்பாடுகள் உள்ளிட்;ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அவர் கலந்துரையாடியுள்ளார்.
குறிப்பாக கொரோனா பரிசோதனைகள், தடமறிதல் செயற்பாடுகள், சிகிச்சை, கொரோனா தொற்றாளர்களுக்குப் பொருத்தமான நடத்தைகள், தடுப்பூசி விநியோகம் மற்றும் கட்டுப்பாடுகள் ஆகியன தொடர்பாக விசேட கவனத்தினை ஆளுநர் செலுத்தியுள்ளார்.
குறிப்பாக, கொரோனாவின் புதிய எழுச்சியைத் தடுப்பதற்காக அனைத்து மாவட்டங்களும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய ஆளுநர் சின்ஹா, டெங்குவைக் கட்டுப்படுத்தும் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், கிராமிய அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்படவும் சுகாதார அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதேவேளை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சின் கூற்றுப்படி, ஜம்மு , காஷ்மீரில் கொரோனா தொற்றாதளர்களாக நாளளொன்றில் 1,364 உறுதிப்படுத்தப்படுகின்றனர். மேலும் இப்பிராந்தியத்தில் 3,28,013 பேர் தொற்றாளர்களாக உள்ளதோடு 4,448 பேர் உயிரிழந்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.