இந்துக்களின் மிக முக்கியத்துவம் வாய்ந்த விரதங்களுள் திருக்கார்த்திகை விரதம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
திருக்கார்த்திகையை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் வீடுகளிலும் திருவிளக்குகள் ஒளியேற்றி இறைவனை வழிபடும் நிகழ்வுகள் நடைபெற்றன.
கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகையை முன்னிட்டு விசேடபூஜைகள் மற்றும் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதிசௌந்தரராஜ குருக்களின் தலைமையில் இந்த பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
சுகாதார நடைமுறைகளைப்பின் பற்றியதாக ஆலய நிர்வாகத்தினர் மற்றும் உபயகாரர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு திருக்கார்த்தினை வழிபாடு முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது மாமாங்கேஸ்வரருக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்று சுவாமி ஊர்வலதாக வந்து ஆலய முன்றிலில் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை அருகில் விசேட பூஜைகள் நடைபெற்று அவை எரிக்கப்பட்டன.
திருக்கார்த்திகையினை முன்னிட்டு ஆலயத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளியூட்டப்பட்டிருந்தது.
இதேபோன்று வீடுகளிலும் திருவிளக்குகள் ஏற்றப்பட்டு ஒளியூட்டப்பட்டதுடன் விசேட வழிபாடுகளிலும் இந்துக்கள் ஈடுபட்டனர்.