தடுப்பூசி குறைவாக போடப்பட்டுள்ள நான்கு மாநிலங்களுடன் மத்திய அரசு இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை முடிவுக்கு வரும் நிலையில், புதுச்சேரி, நாகலாந்து, மேகாலயா, மணிப்பூர் ஆகிய நான்க மாநிலங்களில் தடுப்பூசிபோட்டுள்ளதல் மந்தமான போக்கு நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த நான்கு மாநிலங்களுடனும் மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆலோசனை நடத்தவுள்ளார். இதன்போது அங்கு தடுப்பூசி திட்டத்தை மேலும் தீவிரப்படுத்த அவர் வழிக்காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.