ஆந்திராவில் தொடர்ச்சியாக நீடித்து வரும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தமிழகம்-புதுச்சேரி இடையே கரையை கடந்துள்ளது. இந்நிலையில், ஆந்திராவில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் சித்தூர், கடப்பா, அனந்தபூர் மற்றும் நெல்லூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
திருப்பதி அருகே உள்ள ராயலசெருவு ஏரி உடையும் நிலையில் இருப்பதால் அதனை ஒட்டியுள்ள 18 கிராம மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த ஏரி உடைந்தால் 100 இற்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரில் மூழ்கும் ஆபத்து உள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.