இந்தியாவில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக சீரற்ற காலநிலை நீடித்து வந்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்குள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கைக்கும் தென் தமிழ்நாட்டிற்கும் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இதன்காரணமாக மழைபெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் நவம்பரம் மாதம் 24 தொடக்கம் 26 வரை தொடர்ச்சியாக மழை பெய்யும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.