வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது மாத்திரம் அன்றி ஏனைய கோரிக்கைகள் குறித்தும் மத்திய அரசு பேசி தீர்வுக் காண வேண்டும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. அதுவரை போராட்டத்தை திரும்பப் பெற போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள பாரதிய கிசான் யூனியன் தலைவர் ரகேஷ் திகாய் கூறுகையில், மூன்று விவசாய சட்டங்களை திரும்பப்பெறுவது மாத்திரம் எங்கள் கோரிக்கை அல்ல எனத் தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட மற்ற கோரிக்கைகள் குறித்தும் எங்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுக் காண வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அப்போதுதான் போராட்டத்தைக் கைவிட்டு வீடு திரும்புவோம் எனத் தெரிவித்த அவர், இல்லாவிடில் வீடு திரும்ப மாட்டோம் எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.