திருமணங்களை நிறுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தாமல் அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேல்மாகாண சிறு திருமண சேவை வழங்குநர்கள் சங்கத்தின் செயலாளர் நிரோஷன் குமார இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஏனைய நிகழ்வுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“திருமணங்களிலேயே கொரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் என அடிக்கடி அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன.
ஆனால் இந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் திருமணங்கள் மட்டுமின்றி பல்வேறு மிகப்பெரிய நிகழ்வுகள் நடத்தப்படுகின்றது.
அவ்வாறான நிகழ்வுகளுக்கு கொரோனா சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதில்லை.
ஆனால் திருமணங்கள் தொடர்பில் மாத்திரம் அதிகம் அவதானம் செலுத்தப்படுகின்றமையினால் இந்த கோரிக்கையை விடுத்துள்ளோம்.
திருமண நிகழ்வுகளை ஒரு போதும் நிறுத்த வேண்டாம். திருமணத்திற்கு வரும் மக்களின் எண்ணிக்கையை குறைத்து கட்டுப்பாடுகள் விதித்தால் எங்களுக்கு பிரச்சினைகள் இல்லை.
ஏனெனில் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்தத் திருமணங்களை நம்பியிருக்கிறார்கள். எனவே, அரசாங்கம் இதில் கவனம் செலுத்த வேண்டும்.
திருமணங்களை தடை செய்ய ஒருபோதும் தயாராக வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்“ எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.