எரிபொருள் விலை சூத்திரத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை ஸ்திரப்படுத்தல் நிதியத்தை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாகவும் அதற்கு இன்னும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை எனவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் எரிபொருள் விலை சூத்திரத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என மத்திய வங்கி முன்மொழிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை ஸ்திரப்படுத்தல் நிதியம் மிகவும் பொருத்தமான பொறிமுறையாகும் என்றும் அது நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், குறைந்தபட்சம் எரிபொருள் விலை சூத்திரத்தையாவது நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்புடன் எரிபொருள் விலை அதிகரிக்கப்படாவிட்டால், இழப்பை வரி செலுத்துவோர் அனைவரும் ஏற்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.