தென்னாப்பிரிக்கா, ஹொங்கொங் மற்றும் போட்ஸ்வானா ஆகிய நாடுகளில் பரவும் புதிய வகை கொரொனா வைரஸ் குறித்து மத்திய அரசு மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதயைடுத்து வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்குமாறு தேசிய நோய்த் தடுப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ள சுகாதார செயலர் ராஜேஸ் பூஷண் இந்த மூன்று நாடுகள் மற்றும் நோய் பரவல் அபாயம் உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலத்தில் விசா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வெளிநாட்டு விமான சேவைகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ள சூழலில் இந்த கண்காணிப்பு மிகவும் முக்கியமாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.