ஐரோப்பிய ஒன்றிய தூதுவருக்கும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸிற்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
இன்று(வெள்ளிக்கிழமை) குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளமையினை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்போது ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் பேசப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் 42 வருடங்கள் பழமையானது எனவும், அதை முழுமையாக இரத்து செய்ய முடியாது என்பதை அவருக்கு தெளிவுபடுத்தவுள்ளதாகவும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த பயங்கரவாத தடைச்சட்டம் திருத்தி அமைக்கப்படும் என்பது குறித்தும் அதற்கான யோசனைகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்பது குறித்தும் இதன்போது தெளிவுபடுத்தவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.