மாவீரர் தின நிகழ்வுகளுக்கு கிளிநொச்சி நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்த தடையுத்தரவிற்க்கு எதிராக எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் மேல்முறையீட்டு நகர்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மேல்முறையீட்டு நகர்தல் பத்திரம் மீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 19ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்றத்தில் மாவீரர் தின நிகழ்வுகளுக்கு எதிராக கிளிநொச்சி பொலிஸாரினால் 51பேருக்கான தடையுத்தரவு பெறப்பட்டது.
கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், விசுவமடு, முழங்காவில் ஆகிய பகுதிகளில் மாவீரர் துயிலுமில்லங்கள் காணப்படுவதுடன், உடுத்துறை மாவீரர் துயிலுமில்லத்திற்கும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் பொலிஸாரினால் தடையுத்தரவு பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.