புதிய வகை கொரோனா வைரஸ் திரிபு பேரழிவை ஏற்படுத்தாதென இங்கிலாந்து விஞ்ஞானி பேராசிரியர் காலம் செம்பிள் தெரிவித்துள்ளார்.
புதிய வகை கொரோனா ஒமிக்ரான் குறித்து உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ள நிலையில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
அந்தவகையில் புதிய வகை கொரோனா வைரஸ் திரிபு குறித்து விஞ்ஞானி பேராசிரியர் காலம் செம்பிள் கூறியுள்ளதாவது, இது பேரழிவை ஏற்படுத்தாது.
மேலும் எனது சகாக்கள் இந்த வைரஸ் பயங்கரமானது என கூறி இருக்கின்றனர். ஆனால் அவர்கள், நிலைமையை மிகைப்படுத்தி உள்ளதாகவே நான் கருதுகிறேன்.
இதேவேளை தடுப்பூசியால் கிடைக்கின்ற நோய் எதிர்ப்புச்சக்தி, இன்னும் கடுமையான நோயில் இருந்தும் மக்களை பாதுகாக்கும்” என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.