புதிதாக உருமாற்றம் பெற்றுள்ள ஒமிக்ரான் கொரோனா வைரஸின் புகைப்படம், இத்தாலிய விஞ்ஞானிகளினால் வெளியிடப்பட்டுள்ளது.
உலக நாடுகளை அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ள ஒமிக்ரான் வைரஸின் புகைப்படத்தை, முதன் முறையாக ரோமிலுள்ள Bambino Gesù குழந்தைகள் வைத்தியசாலையின் விஞ்ஞானிகளே வெளியிட்டுள்ளனர்.
வைரஸின் உருவத்தில் ஒட்டியிருக்கும் மனிதர்களின் செல்களுக்குள் நுழைய தேவைப்படும் புரதத்தில், டெல்டா வகை வைரஸை விட ஒமிக்ரான் வைரஸில் அதிக பிறழ்வுகள் உள்ளதாக தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
எனினும், இவை டெல்டா வகை வைரஸை விட அதிக ஆபத்தானவை என கருத முடியாது எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்.