சுமார் ஒரு பில்லியன் கொரோனா தடுப்பூசிகளை ஆபிரிக்காவிற்கு வழங்கவுள்ளதாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உறுதியளித்துள்ளார்.
சீன – ஆபிரிக்க உச்சிமாநாட்டின் போது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இந்த உறுதிமொழியை வழங்கினார்.
ஒரு பில்லியனில், 600 மில்லியன் டோஸ்கள் நேரடியாகவும் 400 மில்லியன் நிதிவழங்கும் நிறுவனங்கள் ஊடாக வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
சீனா ஏற்கனவே ஆபிரிக்க நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் தற்போது தென்னாபிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட புதிய ஒமிக்ரோன் வைரஸ் மாறுபாட்டின் பரவலுக்கு மத்தியில் சீனா இதனை அறிவித்துள்ளது.