கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் தொற்றின் முதலாவது நோயாளி ஜப்பானில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.
நமீபியாவிலிருந்து நாட்டிற்கு வந்த ஒருவருக்கு ஒமிக்ரோன் தொற்று இருப்பது இன்று செவ்வாய்க்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
30 வயதுடைய குறித்த நபருக்கு முன்னதாக விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் குறித்த நோயாளியின் நெருங்கிய தொடர்புகளை அடையாளம் காணும் பணியில் சுகாதார துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
ஒமிக்ரோன் மாறுபாடு நாட்டுக்குள் பரவுவதை தடுப்பதற்கான கடுமையான நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஒரு மாதகாலத்திற்கு எல்லைகளை ஜப்பான் மூடியுள்ளது.