எல்.பி எரிவாயு மாதிரிகள் தொடர்பான மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் நான்கு பேர் கொண்ட குழுவின் அறிக்கை கையளிக்கப்படவுள்ளது.
குறித்த அறிக்கை நாளை (புதன்கிழமை) நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் கையளிக்கப்படவுள்ளது.
இந்த விடயம் தொடர்பான தங்களின் கருத்துக்களுடன் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் இரசாயன மற்றும் செயல்முறைப் பொறியியல் துறையைச் சேர்ந்த பேராசிரியர் சாந்த வல்போலகே தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகாரசபை முன்னதாக ஆறு மாவட்டங்களில் இருந்து எரிவாயு மாதிரிகளைப் பெற்று ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்திருந்தது.
இதற்கமைய மேலதிக ஆய்வுகளுக்காக 12 மாதிரிகள் மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், நிபுணர் குழு தனது அறிக்கையை நாளை நுகர்வோர் விவகார அதிகாரசபையிடம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.