இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இன்று(புதன்கிழமை) 722 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்காரணமாக நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 63 ஆயிரத்து 989 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் உயிரிழந்தவர்கள் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 346ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கொரோனா தொற்றில் இருந்து மேலும் 347 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 40 ஆயிரத்து 387 ஆக அதிகரித்துள்ளது.