ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கையிலேயே கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைப்பெற்ற நாடாளுமன்ற சுகாதார அமைச்சு மீதான வரவு செலவு திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஒரு நாட்டில் ஒரு மில்லியன் பேரில் எத்தனை பேர் கொரோனா தொற்று காரணமாக மரணம் அடைந்துள்ளனரென பார்க்கும்போது எமது நாட்டில் ஒரு மில்லியன் பேருக்கு 664 பேர் மரணமடைந்துள்ளனர் என ராஜித்த சேனாரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த தொகை இந்தியாவில் 334 ஆகவும் மாலைதீவில் 442ஆகவும் ஆப்கானிஸ்தானில் 182 ஆகவும் பங்களாதேஷில் 160 ஆகவும் பாகிஸ்தானில் 126 ஆகவும் காணப்படுகிறது . இதன்படி ஏனைய நாடுகளை விட எமது நாட்டிலேயே அதிகமானோர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதிலும் அரசியல் தலையீடுகள் இருந்தமையே இதற்கு காரணம் எனவும் ராஜித்த சேனாரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.