கடந்த ஆண்டு லெக்கி டோல் கேட்டில் நடந்த பொலிஸாரின் வன்முறைகள் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட நீதித்துறை குழுவின் அறிக்கை குறித்து நைஜீரியாவின் லாகோஸ் மாநில அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
வெள்ளை அறிக்கை என்பது அரசாங்கத்தின் பகுப்பாய்வு மற்றும் அறிக்கையின் முன்மொழியப்பட்ட தீர்வுகளின் உத்தியோகப்பூர்வ ஆவணமாகும்.
போராட்டக்காரர்களை கலைக்க போராட்ட இடத்திற்குள் புகுந்ததில் சுங்கச் சாவடியில் 9 பேர் இராணுவ வீரர்களால் கொல்லப்பட்டனர்.
இருப்பினும் இந்த உயிரிழப்புக்கள் ஊகங்கள் என தெரிவித்துள்ள லாகோஸ் அரசாங்கம் உயிரிழப்பு இடம்பெற்றதையும் மறுத்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்பு மாநில ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நீதி விசாரணைக் குழுவின் அறிக்கையில், நிராயுதபாணியான போராட்டக்கற்களை இராணுவம் கொன்றது என்றும் 2020 ஒக்டோபர் 20 சம்பவத்தை மூடிமறைத்ததாகவும் தெரிவித்துடன் படுகொலை என்றும் விவரித்துள்ளது.
இருப்பினும் கடந்த வாரம் இது ஒரு படுகொலை இல்லை என் மறுப்பு தெரிவித்திருந்த நைஜீரிய தகவல் அமைச்சர் இந்த அறிக்கை போலி என்று கூறினார்.
இந்நிலையில் 32 பரிந்துரைகளில் 11 ஐ ஏற்றுக்கொண்டதாக நேற்று செவ்வாயன்று லாகோஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதில் 14 பரிந்துரைகள் மாநில அதிகாரத்திற்கு புறம்பானது என்றும், அதன் விளைவாக மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்றும் கூறியுள்ளது.