ரஷ்யா மற்றும் இந்தியாவிற்கு இடையே ஆயுத ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எதிர்வரும் திங்கட்கிழமை இந்தியாவிற்கு வரவுள்ளார். இதன்போதே குறித்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதாக கூறப்படுகிறது..
இதன்படி ரஷ்யாவிடம் இருந்து தானியங்கி ஏ.கே 203 ரக துப்பாக்கிகளை கொள்வனவு செய்ய இந்தியா தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரம் துப்பாக்கிகளை கொள்வனவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கிகள் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதியில் தயாரிக்கப்படவுள்ளதுடன், முதலில் 70 ஆயிரம் துப்பாக்கிகள் ரஷ்யாவின் உதிரி பாகங்களுடன் தயாரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.