பூஸ்டர் தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்துவதற்கான அனுமதியை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணையத்திடம் சீரம் நிறுவனம் கோரியுள்ளது.
கொரோனா தொற்றின் புதிய திரிபான ஒமிக்ரோன் வைரஸ் குறித்த அச்சம் நிலவிவருகின்ற நிலையில், மேற்பதி அனுமதி கோரப்பட்டுள்ளது.
இது குறித்து கடிதம் ஒன்றை எழுதிய சீரம் நிறுவனம் தற்போது பூஸ்டர் எனப்படும் மூன்றாவது தடுப்பூசிக்கான சூழல் நிலவுவதாக தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களுக்கான அமைப்பு அஸ்ட்ரா ஜெனிகா உள்ளிட்ட தடுப்பூசிகளை அங்கீகரித்து உள்ளதாக குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.