உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை மூன்று நிபந்தனைகளின் கீழ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் சந்தைக்கு விநியோகிக்கத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தெரிவித்துள்ளது.
எரிவாயு தொடர்பான விசாரணை அறிக்கைகளின் அடிப்படையில் தொழில்நுட்பக் குழு எரிவாயு விநியோகத்திற்கு பரிந்துரைகளை வழங்கியிருந்தது.
அதன்படி, முன்பு இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு சிலிண்டர்களை வழங்கக்கூடாது, தரத்தின்படி மணங்களைக் கண்டறிய சிலிண்டர்களில் ‘மெர்காப்டன்’ என்ற வேதிப்பொருள் கட்டாயமாக்கப்பட வேண்டும், ஒவ்வொரு 100 எரிவாயு சிலிண்டர்களில் ஒன்று உற்பத்திச் செயற்பாட்டின்போது பரிசோதிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட மூன்று நிபந்தனைகளின் கீழ் எரிவாயு விநியோகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.