இந்தோனேசியாவின் ஜாவா தீவில் எரிமலை வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
செமெரு மலையிலிருந்து பாரிய அளவிலான புகை மூட்டம் ஏற்பட்டதுடன் அடர்த்தியான புகை சூரியனை மறைத்தமையினால் அக்கிராமம் இருளில் மூழ்கியது.
காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 41 என்றும் அவர்கள் தீக்காயங்களுக்கு ஆளானதாகவும்
லுமாஜாங் மாவட்டத்தின் துணைத் தலைவர் கூறியுள்ளார்.
கட்டிடங்களில் சிக்கியுள்ள குறைந்தது 10 பேரையாவது மீட்க ஹெலிகாப்டர்கள் உதவி அவசியம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதேநேரம் 35 பேர் உள்ளூர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக இந்தோனேசியாவின் பேரிடர் முகாமைத்துவ நிலையம் கூறியுள்ளது.
இந்த வெடிப்பின் காரணமாக மூச்சுத் திணறல், மின் தடை மற்றும் மழையால் குப்பைகள் சேற்றாக மாறியதால் வெளியேற்றும் முயற்சிகள் தடைபட்டுள்ளன.