நாகலாந்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மியன்மார் எல்லைப்பகுதியில் இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களில் 10 பேர் தினக்கூலிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இராணுவத்தினருக்கும், பொதுமக்களுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.