கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்வது தொடர்பாக கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
சமீபகாலமாக இந்த ஒப்பந்தம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதனை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இதற்கிடையில் இந்த உடன்படிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றில் கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் எல்லே குணவங்ச தேரர் உள்ளிட்ட தரப்பினரால் அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் அமைச்சரவை தீர்மானத்தை சவால் செய்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் பிரதிவாதிகளாக அமைச்சர்களான உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு காரணம் மற்றும் உடன்படிக்கையை கைச்சாத்திடுவதற்கான சட்ட கட்டமைப்புகள் என்பவற்றை நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.