பிற நாடுகளுக்கு தனது படைகளை அனுப்புவதில் அமெரிக்கா அதிக எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அபுதாபியில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா பிற நாடுகளுக்கு தங்களது படைகளை அனுப்புவதில் எச்சரிக்கை காட்டுவதை பார்க்க முடிகிறது.
அத்துடன் தனது நீட்சியை சரிசெய்வதற்கு அந்நாடு மேற்கொள்ளும் முயற்சியையும் காணமுடிகிறது. இது வௌ;வேறு வடிவங்களை எடுத்திருக்கலாம். வெவ்வேறு வழிகளில் செயல்படுத்தப்பட்டிருக்கலாம்.
உள்நாட்டு முன்னேற்றத்திற்கும், வெளிநாடுகளோடு உள்ள தனது கடமைக்கும் இடையிலான சமநிலையை அமெரிக்கா மறு ஆய்வு செய்து வருகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.