பாகிஸ்தான் – சியல்கோட் பகுதியில் இலங்கையர் ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இதுவரை 124 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த பொறியியலாளர் வெள்ளிக்கிழமையன்று ஒரு கும்பலால் அடித்து எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இலங்கை அரச தலைவர்கள் உட்பட பலர் கண்டனம் வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த விடயம் கண்டிக்க தக்கது என கூறியிருந்த அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான், சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தண்டிப்போம் என்றும் உறுதியளித்திருந்தார்.
அந்தவகையில் கைது செய்யப்பட்ட 124 பேர் கொண்ட குழுவில் 19 பேர் முக்கிய சந்தேக நபர்களாக கருதப்படுவதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர்களில் 13 பேர் நேற்று விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பாக 160 சிசிடிவி கமரா காணொளிகளை ஆய்வு செய்த பின்னர் 900 தொழிற்சாலை ஊழியர்களிடம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.














