இஸ்லாமிய தீவிரவாதம் தற்போது உலகில் உள்ள வேறு எந்த வகை தீவிரவாதத்தையும் விட பயங்கரமானதாகவும், காட்டுமிராண்டித்தனமாகவும் மாறியுள்ளது என ஒரே நாடு, ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் தலைவர் ஞானசார தேரர் கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் சியல்கோட் பகுதியில் பிரியந்த குமார ஒரு கும்பலால் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தை கொண்டு இலங்கையில் வளர்ந்து வரும் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மத தீவிரவாதம் மட்டுமல்ல, எந்த வகையான தீவிரவாதத்தின் விளைவுகளும் பேரழிவை ஏற்படுத்தும் என குறிப்பிட்ட ஞானசார தேரர், ஆனால் இஸ்லாமிய தீவிரவாதம் அனைத்தையும் விட கொடூரமானதும் காட்டுமிராண்டித்தனமானதுமாக மாறியுள்ளதாக தெரிவித்தார்.
விஞ்ஞானம், தொழில்நுட்பம், அறிவு, கலாச்சாரம், நாகரீகம், கலை, தத்துவம் உள்ளிட்ட பல நூற்றாண்டுகளாக மனிதனின் அனைத்து சாதனைகளின் மதிப்புகளையும் இது இடைவிடாமல் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆகவே தற்போது உலகை ஆட்டிப்படைத்து வரும் இஸ்லாமிய தீவிரவாதத்தின் உண்மை தன்மையை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றும் இலங்கையிலும் அதிகரித்து வரும் இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்றும் ஞானசார தேரர் தெரிவித்தார்.