கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான கட்டாய சுகாதார நடவடிக்கைகளை எதிர்த்து, பெல்ஜியத்தின் பொதுமக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சுமார் 8,000பேர் பிரஸ்ஸல்ஸ் வழியாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகத்தை நோக்கி படையெடுத்தனர்.
இதன்போது, போராட்டத்தை கலைக்க பாதுகாப்பு படையினர் முயன்ற போது இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.
ஐரோப்பிய ஒன்றிய தலைமையகத்திற்கு வெளியே திரண்ட மக்களை கட்டுப்படுத், முள்வேலி தடுப்பு போடப்பட்டிருந்தது.
இரண்டு ட்ரோன்களும் ஒரு ஹெலிகொப்டரும் மேலே வட்டமிட்டபோது, போராட்டக்காரர்கள், பட்டாசுகள் மற்றும் பீயர் கேன்களை வீசினர். இதற்கு பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசி பதிலடி கொடுத்தனர்.
கடந்த மாதம் தடுப்பூசி மற்றும் முடக்கநிலை கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஒன்று திரண்ட 35,000பேரை விட இந்த எண்ணிக்கை குறைவானது.