எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் தனிமைப்படுத்தல் மற்றும் சுகாதார நடைமுறைகளை உரிய முறையில் பின்பற்றுமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா தொற்றின் ஒமிக்ரோன் பரவல் தற்போது வெளிநாடுகளில் அடையாளம் அதிகளவு பரவிவரும் நிலையில் இலங்கையில் ஒருவருக்கும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன இந்த கோரிக்கையை விடுத்தார்.
மேலும் சுகாதார வழிகாட்டுதல்களை மீறி மக்கள் செயற்பட்டால் நாடு பேரழிவை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அத்தோடு தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.