கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடலொன்று, இன்று (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த சந்திப்பு இன்று இரவு 7.30 மணிக்கு இடம்பெறும். இதன்போது நாட்டை முழுமையாக முடக்காது கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் ஆராயப்பட இருக்கின்றது எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை நாட்டிலுள்ள அனைவரும் 2 தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்வதனை கட்டாயமாக்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.