கொரோனா வைரஸ் தொற்றுநோயிலிருந்து பெய்ஜிங்கின் தூண்டுதலால் மீண்டு வந்ததை அடுத்து, சீனாவின் கடன் சுமை மேலும் அதிகரித்துள்ளதாகவும் 2008 உலகளாவிய நிதி நெருக்கடியைத் தொடர்ந்து முன்னோடியில்லாத கடன் விரிவாக்கத்தை நிர்வகிக்க நிதி அமைப்பு இன்னும் போராடி வருகிறது எனவும் யு.எஸ்.சி.சி தெரிவித்துள்ளது.
அமெரிக்கா- சீனா பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு மறுஆய்வு ஆணையகம் (யு.எஸ்.சி.சி) தனது 2021 ஆண்டு அறிக்கையில், காங்கிரசுக்கு தெரிவித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டில் சீனாவின் நிதிக் கட்டுப்பாட்டாளர்கள், நிதி அமைப்பில் வளர்ந்து வரும் உறுதியற்ற தன்மை குறித்த அச்சங்களுக்கு மத்தியில், ஒரு டீலிவேஜிங் பிரச்சாரத்தைத் தொடங்கினர்.
இருப்பினும் சீனாவின் கடன் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டில் சீன கம்யூனிஸ்ட் கட்சி, கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையை நிவர்த்தி செய்ய நிதி ஊக்க நடவடிக்கைகளைப் பயன்படுத்தியது என கொரோனா யு.எஸ்.சி.சி இன் 551 பக்க அறிக்கை கூறுகிறது.
யு.எஸ்.சி.சி என்பது அமெரிக்கா- சீனா உறவில் வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகளைக் கண்காணித்து அறிக்கையிடுவதற்காக காங்கிரஸால் உருவாக்கப்பட்ட இருதரப்பு ஆணையகமாகும்.
இதேவேளை 2019 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டின் முடிவில், சீனாவின் மொத்தக் கடன், அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 262.9 சதவிகிதத்தை எட்டியது. இது 2010 ஆம் ஆண்டின் இறுதியில் 178.8 சதவிகிதத்தில் இருந்து 37.2 டிரில்லியன் டொலர் ஆக உயர்ந்துள்ளது என்று சர்வதேச தீர்வுகளுக்கான வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
சீனாவின் கடன் வளர்ச்சி 2019 ஆம் ஆண்டின் இறுதிக்கும் 2020 ஆம் ஆண்டின் இறுதிக்கும் இடையில் துரிதப்படுத்தப்பட்டு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 289.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கடந்த டிசம்பர் 2020 இல், சீனாவின் முன்னாள் நிதியமைச்சர் Lou Jiwei, “அரசாங்கக் கடன், சீனாவின் எதிர்கால நிதி நிலைத்தன்மை மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு மேலும் மேலும் அச்சுறுத்தலாக மாறும்’ என தெரிவித்ததாக ருளுஊஊ கூறியது.