சுற்றுலாத் துறையின் வளர்ச்சி மற்றும் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு தொடர்ந்து நிலவும் சுகாதாரக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுறுத்தினார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முற்பகல் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், 16-19 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டாவது டோஸை வழங்குவதற்கான ஒப்புதலை வழங்குமாறு கொரோனா குழுவிற்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
அதே நேரத்தில் 12-15 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்படும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும் பொது இடங்களுக்கு பிரவேசிப்பதற்கு தடுப்பூசி அட்டைகள் கட்டாயமாக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
அத்தோடு, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை செலுத்தி முடிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.