அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் வீசிய டெனாடோ சூறாவளி காரணமாக 80 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மாநில வரலாற்றில் மிகவும் மோசமான சூறாவளி இதுவாகும் என மாநில ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சூறாவளி காரணமாக, மாநிலத்தின் பல பாகங்களில், கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளதால், மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கென்டகியில் உள்ள மெழுகுவர்த்தி தொழிற்சாலை ஒன்று புயலால் பாதிப்படைந்துள்ளதாகவும் அங்கு 110 பேர் இருந்ததாகவும் ஆளுநர் ஆண்டி பெஷீர் கூறியுள்ளார்.
இவர்களில் 40க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சுவதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மேஃபீல்டில் உள்ள பொலிஸ் நிலையம் முழுமையாக சேதமடைந்துள்ள அதேவேளை தீயணைப்பு வீரர்களின் உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.