கனடாவின் வாட்டர்லூ பிராந்தியத்தில் உள்ள ஒன்பது விளையாட்டுக் குழுக்கள், இப்போது ஓமிக்ரோன் தொற்று மாறுபாடுடன் இணைக்கப்பட்டுள்ளன.
மேலும், அந்த அணிகளுடன் தொடர்புடைய 500க்கும் மேற்பட்ட அதிக ஆபத்துள்ள தொடர்புகள் பிராந்தியத்திற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ளதாக வட்டார சுகாதார மருத்துவ அலுவலர் டொக்டர் ஹ்சியு-லி வாங் தெரிவித்துள்ளார்.
இதனிடையே வாட்டர்லூ பிராந்தியத்தில் ஓமிக்ரோன் கொவிட்-19 மாறுபாட்டின் நான்கு உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் இனங்காணப்பட்டுள்ளதாக பொது சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து டொக்டர் ஹ்சியு-லி வாங் இதுகுறித்து மேலும் கூறுகையில், ‘ஹொக்கி மற்றும் பேஸ்பால் அணிகளில் பெரும்பாலான வீரர்கள் ஐந்து முதல் 11 வயதுக்குட்பட்டவர்கள்’ என கூறினார்.
மேலும், ‘இந்த விளையாட்டுக் குழுக்களுடன் தொடர்புடைய ஏராளமான தொற்றுகள், ஒன்றாரியோவில் மற்ற இடங்களில், ஏற்கனவே வேகமாக பரவி வருவதைக் குறிக்கிறது.
இது பாடசாலைகள் மற்றும் பணியிடங்களை பாதிக்கிறது. அதிக ஆபத்துள்ள தொடர்புகளாகக் கருதப்பட்டதால் பல பாடசாலைகள் கூட்டுக் குழுக்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ஆனாலும், நாங்கள் வகுப்பில் கற்றலுக்கு முன்னுரிமை அளிக்கிறோம்’ என வாங் கூறினார்.
எனினும், உறுதிப்படுத்தப்பட்ட நான்கு தொற்றுகளும் அந்த வயதினருக்கு உண்டா என்பதனை ஹ்சியு-லி வாங் தெரிவிக்கவில்லை.
அத்துடன், பரவும் அபாயத்தைக் குறைக்க, ஆண்டு இறுதி வரை அனைத்துப் பாடநெறி நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு பிராந்தியத்தில் உள்ள பாடசாலை சபைகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
சமூக விளையாட்டு லீக்குகள் மற்றும் குழுக்கள் அனைத்து அத்தியாவசியமற்ற சமூக தொடர்புகளையும் குறைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், வைரஸின் சாத்தியமான பரவலைக் குறைக்க அடுத்த இரண்டு வாரங்களுக்கு மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பது குறித்து பரிசீலிக்குமாறு வணிகங்களை வாங் கேட்டுக் கொண்டார்.
உள்ளூர் கட்டுப்பாடுகளை செயற்படுத்த தான் இன்னும் திட்டமிடவில்லை என்றும், ஒன்றாரியோ முழுவதும் ஓமிக்ரோன் மாறுபாடு பரவி வருவதால், மாகாணத்துடன் இணைந்து செயற்படுவதாகவும் வாங் கூறினார்.
தகுதியுடையவர்களுக்கு மூன்றாவது டோஸ் எடுப்பது உட்பட, நோய்த்தடுப்பு மருந்துகளைப் பெறுமாறும், விளையாட்டு நிகழ்வுகள் உட்பட மற்றவர்களுடனான அனைத்து அத்தியாவசியத் தொடர்பைக் குறைக்கவும் வாங் மக்களைக் கேட்டுக் கொண்டார்.