உலகம் முழுவதும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒமிக்ரோன் தொற்று நிலைமையைக் கருத்தில் கொண்டுதான் சர்வதேச விமானங்களை இயக்குவது குறித்து தீர்மானிக்கப்படும் என மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ‘சுகாதார அமைச்சகத்துடன், நெருங்கிப் பணியாற்றி வருவதாகவும், ஒமிக்ரோன் வைரஸ் தொற்று நிலைமையைப் பொறுத்துதான் சர்வதேச விமான சேவையை மீண்டும் தொடங்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
பிற அமைச்சகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு அடுத்த 2 வாரங்களில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.