மலேசியாவின் தெற்கு பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில் 16பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 27 பேரை காணவில்லை.
அண்டை நாடான மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட சுமார் 60 இந்தோனேசியர்களை ஏற்றிச் சென்ற கப்பல், தெற்கு மாநிலமான ஜோகூரில் புதன்கிழமை புயல் காலநிலையில் கவிழ்ந்தது.
உயிரிழந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திடீரென ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கத்தை கடக்கும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர்களில் ஏழு ஆண்களும் நான்கு பெண்களும் அடங்குவர். மேலும் 20 ஆண்களையும் இரண்டு பெண்களையும் மீட்புப் படையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.
காணாமல் போனவர்கள் உயிருடன் இருப்பது சாத்தியமில்லை என தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.