இணைய வர்த்தகத்தில் ஈடுபடுவதற்காக, நடைமுறையிலுள்ள வணிக சட்ட கட்டமைப்பை வலுப்படுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் இது தொடர்பில் நேற்று (புதன்கிழமை) கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இணைய வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பல முன்னணி நிறுவனங்கள் விவாதத்தில் இணைந்தன.
இணைய வர்த்தகத்தின்போது, மேற்கொள்ள வேண்டிய வலுவான சட்ட கட்டமைப்பின் அவசியம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
நீதியை உறுதிப்படுத்தும் மற்றும் வணிகம் மற்றும் நுகர்வோர் ஆகிய இருவரின் உரிமைகளையும் பாதுகாக்கும் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக நீதியமைச்சகம் தெரிவித்துள்ளது.