பல்வேறு சீனப் பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்ற நேபாளத்தைச் சேர்ந்த மாணவர்கள், கொரோனா வைரஸ் தொற்று பரவலை காரணம் காட்டி மீண்டும் நுழைவதற்கு பெய்ஜிங் அனுமதிக்காததால், சீனாவில் அவர்கள் பயிற்சி பெற முடியவில்லை என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
காத்மாண்டு போஸ்ட்டின் கூற்றுப்படி, சீனாவில் இருந்து கோட்பாட்டுப் படிப்புகளை முடித்த 153 மாணவர்கள், கொரோனா வைரஸ் பரவலை காரணம் காட்டி, பெய்ஜிங்கிற்குத் திரும்ப அனுமதிக்காததால், அவர்களது படிப்பை முடிக்க முடியவில்லை எனக் கூறப்படுகின்றது.
அதாவது கொரோனா வைரஸ் தொற்றுநோய் அச்சுறுத்தலை ஏற்படுத்தியதை தொடர்ந்து 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் மாணவர்கள் நேபாளத்திற்கு வீடு திரும்பியதாக காத்மாண்டு போஸ்ட் தெரிவித்துள்ளது.
அவர்கள் தங்கள் கோட்பாட்டு கல்வியை இணையம் ஊடாக முடித்தனர் மற்றும் பல்கலைக்கழகங்கள் சான்றிதழ்களை வழங்கியுள்ளன.இருப்பினும், இன்டர்ன்ஷிப் அனுபவம் இல்லாததால் அவர்கள் எம்.பி.பி.எஸ் பட்டம் பெறவில்லை. ஒரு எம்.பி.பி.எஸ் மாணவருக்கு ஐந்து வருட படிப்புக்குப் பிறகு ஒரு வருடம் இன்டர்ன்ஷிப் தேவை. 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் சேர்ந்த மாணவர்களை, சீனா மீண்டும் நுழைய அனுமதிக்காததால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் படிக்கும் இந்த மாணவர்களை நேபாளத்தில் இன்டர்ன்ஷிப் செய்வதைத் தடை செய்ய அரசாங்கம் முடிவு செய்யும் வரை நேபாள மாணவர்கள் மருத்துவம் படிக்க மிகவும் விருப்பமான இடமாக சீனா இருந்தது.
தற்போது பெரும்பாலான மாணவர்கள் எம்.பி.பி.எஸ் படிப்பிற்காக வங்கதேசத்திற்குச் செல்கின்றனர்.
சீனப் பல்கலைக் கழகங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு வழிவகுத்த கல்வி ஆலோசனை நிறுவனங்கள், ஐந்தாண்டுப் படிப்பில் பெரும்பாலான பல்கலைக் கழகங்களில் சீன மொழியை உட்பொதித்துள்ளன.
ஸ்பீட் இன்டர்நேஷனல் எஜுகேஷன் கன்சல்டன்சியின் நிர்வாக இயக்குநர் மிலன் கியாவாலி, ‘பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் கூடுதல் ஒரு வருட மொழிப் படிப்பு இல்லை.
மாணவர்கள் மொழி படிப்புக்கான சான்றிதழ்களைப் பெறுகிறார்கள். ஆனால் நேபாள அரசாங்கம் அத்தகைய சான்றிதழ்களை ஏற்கவில்லை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.