இந்தியாவில் இதுவரை 101 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால், கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளதாகவும், தினசரி கொரோனா பாதிப்புகள் கடந்த 20 நாட்களாக 10 ஆயிரத்திற்கும் குறைவாகவே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உலக அளவில் 91 நாடுகளில் ஒமிக்ரோன் வைரஸ் பரவியுள்ளது. டெல்டா வைரஸ் தொற்றை விட ஒமிக்ரோன் தொற்றின் பரவல் அதிகம் என உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதனால் சமூக பரவல் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினசரி தடுப்பூசி போடுவதில் உலக அளவில் இந்தியா முன்னிலையில் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.