நாட்டின் பல பகுதிகளிலும் இன்று(புதன்கிழமை) மாலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரையான காலப்பகுதியில் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டு மின்பிறப்பாக்கிகள் செயலிழந்துள்ளமை காரணமாகவே இவ்வாறு மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷனா ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய இன்று மாலை 6 மணி தொடக்கம் 9.30 மணிவரையிலான காலப்பகுதியில் 30 அல்லது 45 நிமிடங்கள் வரை மின்வெட்டு அமுலாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், எந்தெந்த பகுதிகளில் மின்வெட்டு ஏற்படும் என்பது குறித்து சரியாக தெரிவிக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.